வாகன ஓட்டிகளின் ஹுரோவாக மாறிய போக்குவரத்து காவலர் : குண்டும் குழியுமான சாலைகளை சமன் செய்த பணிக்கு வரவேற்பு

திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.


திருப்பூர் : குண்டும், குழியுமாகக் காட்சியளித்த சாலைகளை, சக போலீசாரின் உதவியுடன் மண்ணை நிரப்பி சமன் செய்த திருப்பூர் போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை வாகன ஓட்டிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. 

திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் சாலை மேம்பாட்டுப் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். இதில், பல்வேறு இடங்களில் சாலை பணிகள் சரிவர முடியாமலும், சாலைகள் பெயர்ந்த நிலையில் குண்டும் குழியுமாகவும் இருந்து வருகிறது. இதனால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழுந்து விபத்துக்கள் ஏற்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 



இந்த நிலையில், மோசமான சாலைகளால் அடிக்கடி வாகன ஓட்டிகள் கீழே விழும் இடங்களைக் கண்டறிந்த திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவலர் பாண்டியராஜன், விபத்துகளை தடுக்கும் வகையில் வெள்ளியங்காடு பிரிவு, காங்கேயம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் உள்ள குழிகளில் உடன் பணிபுரியும் காவலர்களின் உதவியுடன் மண்ணை நிரப்பி சாலைகளை சமன்படுத்தினார்.



போக்குவரத்து காவலர்கள் என்றாலே வாகன ஓட்டிகள் பயந்து ஓடும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையின் பணியை சிரமம் பாராமல் மண்ணை வரவழைத்து பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று சாலையை சமன்படுத்திய இவரின் நற்பணியானது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல, விபத்துகளைத் தடுப்பதும் காவலர் பணிதான் என்பதை உணர்த்தும் வகையிலும், அதனை மேற்கொள்ள இதுவும் ஒரு வழிதான் என பல காவலர்களுக்கு, போக்குவரத்து காவலர் பாண்டியராஜன் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...