அவிநாசியை அடுத்த செங்காளிபாளையத்தில் சித்தார்த் என்ற 7 வயது சிறுவன் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர்.


திருப்பூர்: செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (30). இவர் தனது வீட்டின் அருகிலேயே உள்ள விசைத்தறிக் கூடத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சிவா (9) மற்றும் சித்தார்த் (7) என இரண்டு மகன்களும் உள்ளனர். 

சிவா மற்றும் சித்தார்த் இருவரும் நல்லகவுண்டன் பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் இரண்டாம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர்களது தாய் இந்திராணிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் நேற்று இருவரும் பள்ளிக்கு செல்லவில்லை.

இதையடுத்து இருவரும் ஆளுக்கொரு புரமாக விளையாடிக் கொண்டிருந்தனர். மதிய உணவுக்காக வீட்டிற்கு வந்த சாமிநாதன், சித்தார்த்தை காணவில்லை என தேடியுள்ளார். கட்டிடம் கட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பத்து அடி ஆழமுள்ள தரைமட்ட தொட்டிக்கு அருகே சித்தார்தின் செருப்பு கிடப்பதை கண்ட சாமிநாதன், பதற்றத்துடன் சென்று தொட்டிக்குள் குதித்து பார்த்த போது சித்தார்த் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...