'பிளாட்பாரத்தில் எங்கள் குடியிருப்பு' : கருணாநிதிக்காக காத்துக்கிடக்கும் செய்தியாளர்கள்...

சென்னை: தி.மு.க., தலைவர் உடல்நிலை குறித்த செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் பொருட்டு காவேரி மருத்துவமனை முன்பு இரவு-பகல் பாராமல் செய்தியாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

சென்னை: தி.மு.க., தலைவர் உடல்நிலை குறித்த செய்தியை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கும் பொருட்டு காவேரி மருத்துவமனை முன்பு இரவு-பகல் பாராமல் செய்தியாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.



அவரைக்காண அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். பலரும் அவரது உடல் நிலை குறித்து தெரிந்து கொள்ள தொலைக்காட்சி செய்திகளையும், இணையதள செய்தி பக்கங்களையும் புரட்டிக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க., தொண்டர்கள் காவேரி மருத்துவமனையில் தவமாய் தவம் கிடக்கின்றனர்.

இந்த செய்திகளை உடனுக்குடன் மக்களுக்கு அளிக்கும் செய்தியாளர்கள் நிலை மிக மோசமாகி விட்டது.

பிளாட்பாரம்

சிப்ட் அடிப்படையில் பணி புரிந்தாலும், பல செய்தியாளர்கள் அம்மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியுள்ளனர். தாங்குவதென்றால் மருத்துவமனையினுள் எதோ ஒரு விருந்தினர்கள் அறையில் என்று நினைக்க வேண்டாம். மருத்துவமனை வளாகத்தினுள் உள்ள பிளாட்பாரம் ஒன்றை குடியிருப்பாக மாற்றிக்கொண்டனர் அவர்கள்.

முக்கியஸ்தர்கள் பேட்டி, தலைவர்கள் வருகை என்று நாள் முழுவதும் 'மைக்'கை நீட்டிக்கொண்டும், காமிராவை சுமந்து கொண்டும், பகல் முழுவதும் நின்றே கழிக்க வேண்டும். இதுவே அவர்களின் தற்கால வாழ்க்கை முறையாகிவிட்டது.

"களைத்துப் போயிடுச்சு., உக்காருவோமா" என்ற எண்ணம் அவர்களுக்குள் உதிக்க, "நாங்க இருக்கோம்" என்று அவர்களுக்காக காத்துக்கிடந்தது அங்குள்ள பிளாட்பாரம். அங்கேயே உணவு, பிறகு உறக்கம். திடீரென முக்கியமான நபர் அங்கு வந்தால், உடனே தூக்க கலக்கத்தோடு தொடரும் பணி. இவ்வாறாக மூன்றாவது நாட்களாக தொடர்கிறது அவர்களின் வாழ்க்கை.

போகமாட்டோம்

கருணாநிதியின் உடல் நிலை தற்போது முன்னேறிவிட்டது என்று ஸ்டாலின் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும், மருத்துவமனை நிர்வாகமும் அறிவித்தும், அக்கட்சித் தொண்டர்கள் அங்கிருந்து நகரவில்லை. அவர்களை அங்கிருந்து கிளம்புமாறு போலீசார் அறிவுறுத்தியும் போகமாட்டோம் என்று அடம்பிடிக்கின்றனர்.

பதட்டம் குறையாதா காரணத்தால், செய்தியாளர்களும் அங்கிருந்து விடைபெற வழியில்லாமல் நிற்கின்றனர்.

பணியைக் கருத்தில் கொண்டு செய்தியாளர்களின் இந்த செயலை பார்க்கும் போது, "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னால் தான் பேச்சிருக்கும் ; கடமை... அது கடமை" என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...