மேட்டுப்பாளையத்தில் வனத்துறை அலுவலகத்தில் இருந்த சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அலுவலத்தில் இருந்த 10 அடி உயரம் கொண்ட சந்தன மரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான அலுவலத்தில் இருந்த 10 அடி உயரம் கொண்ட சந்தன மரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரிக்கு எதிரே வனத்துறைக்கு சொந்த விதைப் பண்ணை உள்ளது. இங்கு மரம் சார்ந்த பல்வேறு விதமான நாற்றுகள் உற்பத்தி செய்து வனத்திற்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சந்தன மரம், ஈட்டி மற்றும் வேம்பு உள்ளிட்ட மரங்களும் இங்கு வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வனத்தை ஒட்டியுள்ள இந்தப் பகுதி முழுவதும் மேட்டுப்பாளையம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வெளியாட்கள் யாரும் இதனைப் பார்வையிட அனுமதி இல்லை. 



இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் இப்பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், வனத்துறை அலுவலகம் முன்பு சுமார் 10 அடி உயரம் வரை வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியுள்ளனர். அதன்மதிப்பு ரூ. 25,000 முதல் ரூ.40,000 வரை இருக்கும் என தெரியவருகிறது. இதனைத் தொடர்ந்து, மறுநாள் காலை அங்கு வந்த ஊழியர்கள், சந்தன மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, சந்தன மரம் திருட்டு குறித்தும், மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் நள்ளிரவு நடமாடிய ஆட்கள் பற்றியும் வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வனத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை கொண்ட வனத்துறையின் அலுவலகத்திலேயே நடைபெற்ற சந்தன மரம் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...