சமையலர் பாப்பாளுக்கு நிரந்தர வேலை; பிடிஒ மீனாட்சியை இடமாற்றம் செய்ய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆணை

திருப்பூர்: சமையலர் பாப்பாள் விவகாரத்தில் அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இடமாற்றம் செய்தும், சமையலர் பாப்பாளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் ஆணையிட்டுள்ளது.

அவிநாசியை அடுத்த திருமலைக் கவுண்டன்பாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் (42) என்பவர் தலித் என்பதால், பள்ளியில் அவர் சமையல் செய்யக்கூடாது என்று ஒரு சாதி பிரிவினர் கடந்த 18-ம் தேதி பள்ளியில் நுழைந்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, உள்ளூர் ஆதிக்க சாதியினரின் மிரட்டலுக்கு அடிபணிந்த அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சமையலர் பாப்பாளை வேறு ஊருக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டார். ஆனால், தான் இதே பள்ளியில் தான் பணியாற்றுவேன் என்று பாப்பாள் கூறினார். 

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி ஆகியோருக்கு தேசிய தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சம்மன் அனுப்பியது. 

இந்த வழக்கில் தற்போது வரை ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த பிரச்சனை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை நடத்தியது. 

அதில், சமையலர் பாப்பாளை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், அவரை இடமாற்றம் செய்து உத்தரவிட்ட அவினாசி ஊராட்சி ஒன்றிய ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...