கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீரா பானம் விற்பனையைத் தொடங்கிய விவசாயிகள்

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகளின் நீரா பானம் விற்பனை நல்ல வரவேற்பைப் பெற்றது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்னை விவசாயிகளின் நீரா பானம் விற்பனை நல்ல வரவேற்பைப் பெற்றது. 

கோவை மாவட்டத்தில் 10 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகள், 65 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள், 2,159 தென்னை விவசாயிகளும், 1,500 நபர்கள் பங்குதாரர்களாக உள்ள விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் நீரா பானம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விற்பனை செய்யப்பட்டது. 

நீரா பானம் தென்னம் பாளைகளிலிருந்து வடித்தெடுக்கப்படும் இளம் பழுப்பு நிறமுள்ள தித்திப்பான தாவரச்சாறு ஆகும். இதில், அதிகளவு இரும்புச்சத்தும், பாஸ்பரஸ் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் அடங்கியுள்ளதால், இருதய நோய், சிறுநீரக கல் அடைப்பு, கல்லீரல், ஆஸ்த்துமா, இரத்த சோகை போன்ற நோய்களைக் குணப்படுத்தக்கூடியது எனக் கூறப்படுகிறது. 

நீரா பானம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களான நீரா க்ரிஸ்டல் சுகர், நீரா ஹனி, நீரா பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற பொருட்கள் உயர்தரமான முறையில் தயாரிக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்படுகிறது. நீரா பானத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...