நிறைவடைந்தது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா : கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம்

கோவை: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாசகர் கூட்டம் அலை மோதியது. பல தரப்பட்ட வாசகர்களும் விரும்பிய நூல்களை பெருமளவில் வாங்கிச் சென்றனர்.


கோவை: கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வாசகர் கூட்டம் அலை மோதியது. பல தரப்பட்ட வாசகர்களும் விரும்பிய நூல்களை பெருமளவில் வாங்கிச் சென்றனர்.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் 265 ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மட்டுமல்லாது ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளைச் சேர்ந்த நூல்களும் இந்த இடம் பெற்றிருந்தன. புத்தகக் கண்காட்சியை ஒட்டி இலக்கியப் பதிப்பகங்கள் ஏராளமான புதிய நூல்களை வெளியிட்டிருந்தன. 

பத்து நாட்களும் அறிவுக்கேணி, இலக்கியக்கூடல், தொழிலாளர் நிகழ்ச்சிகள், வாசகர் சந்திப்புகள்,நூல் வெளியீடுகள் என இலக்கியத் திருவிழாவாகவே காட்சியளித்தது கொடிசியா தொழிற்காட்சி வளாகம்.

கடந்த ஆண்டை விட அதிகம் வாசகர்கள் பார்வையிட்டு, விற்பனையும் அதிகம் இருந்ததாக பதிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

நிறைவு விழாவில் பேசிய கொடிசியா புத்தகத் திருவிழா தலைவர் எஸ்.செளந்தரராஜன், "2019-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் ஜூலை 28 முதல் நடைபெறும். இந்த ஆண்டை விட அதிகம் ஸ்டால்கள் இடம்பெறும் நிகழ்வாக அடுத்த புத்தகத் திருவிழா இருக்கும். உலகளவில் முக்கியமான புத்தகத் திருவிழாவாக கொடிசியா புத்தகத் திருவிழா நிச்சயம் இடம் பிடிக்கும்." என்று தெரிவித்தார்.

நிறைவு விழாவில் நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயகோகா சுப்ரமணியம், இலக்கியக்கூடல் தலைவர் டி. பாலசுந்தரம், புத்தகத் திருவிழா துணைத்தலைவர் விஜய் ஆனந்த், அறிவுக்கேணித் தலைவர் ஈ.கே.பொன்னுசாமி, டைனமிக் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

புத்தகக் கண்காட்சியின் நான்காவது பதிப்பை பார்க்க...

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...