ஆமை வேகத்தில் நடைபெறும் காரமடை ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைந்து முடிக்கக் கோரிக்கை

கோவை: ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகளால் சுமார் மூன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை: ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் காரமடை ரயில்வே மேம்பால பணிகளால் சுமார் மூன்றரை ஆண்டுகளாக பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு எட்டு முறை தினந்தோறும் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்பாதை காரமடையில் கோவை சாலையின் நடுவே செல்வதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.33.75 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.



பாலம் 12 மீ அகலத்தில் 524 நீளத்தில் 16 பில்லர்களும் இரு பக்கம் அபர்மென்ட் சுவர்களும் அமையும் படி வடிவமைக்கப்பட்டது. ஆனால், கொடுக்கப்பட்ட காலக் கெடு முடிவடைந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை பால பணிகள் 60 சதவீத பணிகள் கூட முடிவடையாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் கோவை, நீலகிரி மாவட்டங்களை இனைக்கும் இந்த முக்கிய சாலைகளில் பயணிக்கும் சுற்றுலா வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றிவிட்டு மாற்றுப் பாதையில் சென்று வருகின்றனர். 

மேலும் மேட்டுப்பாளையம், காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து கோவைக்குச் செல்லும் மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை செல்லும் போது அவசர சிகிச்சை அளிக்க முடியாத சூழ்நிலையின் காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.



இருசக்கர வாகனம் செல்ல ரயில்வே கேட்டின் கிழக்குப் பகுதியில் ஏற்படத்தப்பட்ட சுரங்கப் பாதையிலும் மழைக்காலத்தில் 2 அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி தேங்கி நிற்பதால் அதுவும் பயனற்று கிடக்கிறது. எனவே அரசு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...