காவேரி மருத்துவமனையில் கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி

காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை முன் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு இரு தினங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு 9 மணியளவில்  தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து   காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இதயத்துடிப்பு, சுவாசக்கோளாறு மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் குறைவு போன்ற காரணங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டபோதிலும் தற்போது சீராக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. கடந்த  44 மணி நேரமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து,  தீவிர மருத்துவ சிகிச்சையை அடுத்து முக்கிய செயல்பாடுகள் சீராகி வருவதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மருத்துவ நிபுணர்கள் கருணாநிதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம். மருத்துவர்கள் தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சை அளித்து வருவதாக  அவர் கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் மழையிலும் நின்று முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தனர்.  இதனிடையே, தி.மு.க., தலைவர் கருணாநிதி அனுமதிக்கபட்டுள்ள சென்னை காவிரி மருத்துவமனையில் கலைந்து செல்லுமாறு அங்கு குவிந்துள்ள தொண்டர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு  மறுத்த தொண்டர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தி விரட்டினர்.  இதனால், அங்கு பதட்டம் நிலவியது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...