இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் மருத்துவமனையில் அனுமதி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான தா.பாண்டியன், இன்று சென்னையில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தா.பாண்டியன், கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என்றும் தமிழ் உள்ளவரை அவர் வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. கருணாநிதி, தா. பாண்டியன் என இரண்டு மூத்த அரசியல் தலைவர்கள் ஒரே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...