கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் ; ஸ்டாலின்

கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கருணாநிதியின் உடல்நலம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:- தி.மு.க., தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று பின்னிரவில் சற்று நலிவை சந்தித்தது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கோபாலபுரம் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் நலம் விசாரித்தனர். கருணாநிதி பூரண நலம் பெற வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்துச் செய்திகளையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிற்பகலுக்கு பின்னர் அவரது உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. காய்ச்சல் மற்றும் சிறுநீரகத்தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாக மருவத்துவர்கள் குறிப்பிட்டனர். இதனிடையே, இன்று மாலையில் சமூக வலைதளங்களில் கருணாநிதியைப் பற்றி விரும்பத்தகாத சில தகவல்கள் வதந்திகளாக உலா வந்தன. இதனைத் தொடர்ந்து, வதந்திகளை நம்ப வேண்டாம், 





கருணாநிதிக்கு 24 மணிநேரமும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதி உடல்நிலை குறித்து விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி அவரை சந்திக்க வருவதை பொதுமக்களும், தொண்டர்களும் தவிர்க்க வேண்டும், இவ்வாறு தமிழக மக்களை தி.மு.க., செயல்தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.





Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...