தீவு போல காட்சியளிக்கும் மேட்டுப்பாளையம் மலைகிராமங்கள்: உயர்மட்டப் பாலம் மூழ்கியதால் ஆபத்தான பரிசல் பயணம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதன் காரணமாக, ஆபத்தான சூழலில் பரிசலில் பள்ளிக்கு செல்லும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் உயர்மட்ட பாலம் நீரில் மூழ்கியதன் காரணமாக, ஆபத்தான சூழலில் பரிசலில் பள்ளிக்கு செல்லும் நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 



மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சிறுமுகை அருகே உள்ள காந்தையாற்று உயர்மட்ட பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக, நான்கு கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பாலத்தை தாண்டி தண்ணீர் செல்வதால், இதன் மீது பயணிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இதற்கான அபாய எச்சரிக்கை அறிவிப்புகளும் மூழ்கிய பாலத்தின் அருகிலேயே வைக்கப்பட்டும் உள்ளது. நீருக்கடியில் மூழ்கிவிட்ட 20 அடி உயர்மட்ட பாலத்தின் மீது தற்போது பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை வாகனப் போக்குவரத்து நடைபெற்று வந்த பாலத்தின் மீது பரிசல் பயணம் தொடங்கியுள்ளது. 

தண்ணீரில் மிதக்கும் நிலையில் உள்ள இப்பாலத்தின் மீது பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆபத்தான சூழலில் இந்தப் பாலத்தின் மீதுள்ள தண்ணீரில் நடந்து சென்று வருகின்றனர். மூழ்கிவிட்ட பாலத்தின் இருபுறமும் சுமார் முப்பதடி ஆழத்திற்குத் தண்ணீர் உள்ள நிலையில் மிக மிக ஆபத்தான சூழலில் பலர் இருசக்கர வாகனங்களிலும் பாலத்தை கடந்து வருகின்றனர். 



நீருக்கடியில் மூழ்கிய இப்பாலம் இன்னும் மூன்று காலத்திற்கும் மேல் நீருக்கடியிலேயே இருக்கும் என்பதால் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டு, கிராமமக்கள் மீண்டும் பழையபடி பரிசல் பயணத்தை தொடங்கி விட்டனர். பள்ளி செல்லும் குழந்தைகள், மலைக் கிராமங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்து செல்லும் விவசாயிகள் போன்றோர் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கும் கிராமமக்கள், காட்டாற்றில் பரிசல் பயணம் ஆபத்தானது என்ற போதும் தங்களுக்கு வேறு வழியில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். 



மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும் போது யாரும் ஆற்றை பரிசல் மூலம் கடக்கக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. ஆனால், தற்போது வெள்ளப்பெருக்கு காரணமாகப் போக்குவரத்திற்காகவும், ஏற்கனவே பயிரிடப்பட்டிருந்த 9 ஆயிரம் ஏக்கர் வாழை தோட்டங்கள் நீருக்கடியில் மூழ்கி விட்டதால் கிடைக்கும் வாழைத்தார்களை வெட்டவும் பொதுமக்கள் பரிசல்களையே பயன்படுத்தி வருகின்றனர். அடிக்கடி நீருக்குள் மூழ்கி வெளிவரும் காந்தையாற்று பாலம் சேதமடைந்து விட்டதால், வெள்ளம் வடிந்த பின்னராவது இதனை புதுப்பித்து, தற்போது உள்ளதைக் காட்டிலும் 12அடி உயர்த்திக் கட்டுவது அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...