கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, விசாரணையின் போது போலீசார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கோவை: திருமண ஆசை காட்டி பலரிடம் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்ருதி, விசாரணையின் போது போலீசார் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் கொடுத்த பண மோசடி புகாரில் நடிகை ஸ்ருதி, தாய் சித்ரா மற்றும் அவரது தந்தையாக நடித்த பிரசன்ன வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகிய 4 பேர் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக பல மோசடி வழக்குகள் அவர்கள் மீது பதிவாகியதால், சகோதரர் சுபாஷை தவிர மற்ற 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நடிகை ஸ்ருதி, இன்று கோவை கோபாலபுரத்தில் உள்ள வழக்கறிஞர் அறையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விசாரணையின் போது போலீசாரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாகக் கூறி காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பெண்கள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.