குழாய் உடைப்பால் சேதமடையும் சாலைகள்: சரிசெய்யாத அதிகாரிகளைக் கண்டித்து வாழைமரம் நட்டு நூதனப் போராட்டம்

கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்காததைக் கண்டித்து சாலையில் வாழைமரம் நட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மேட்டுப்பாளையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சேதமடைந்த சாலையை அதிகாரிகள் சீரமைக்காததைக் கண்டித்து சாலையில் வாழைமரம் நட்டு பொதுமக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகர் மற்றும் வழியோர கிராம மக்களுக்குக் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல லட்சம் எம்.எல்.டி., தண்ணீர் குடிநீருக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, மேட்டுப்பாளையம் முதல் திருப்பூர் வரை 30 கிலோ மீட்டருக்கு மேல் சாலையோரத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே இந்த ராட்சத குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, மேட்டுப்பாளையம் பகுதிகளில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலைகளில் வீணாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள காந்திபுரம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக சாக்கடை கால்வாயில் கலந்து வருகிறது. இதனால், சாலைகள் சேதமடைவதுடன் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். 

இது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடமும் திருப்பூர் மாநகராட்சியிடமும் பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்து இன்று அப்பகுதி மக்கள், சாலையில் வாழை மரம் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்தளம் அடித்து ஒருவிழாவைப் போல வாழை மரத்தினை சாலையில் நட்ட அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுடன் திருப்பூர் குடிநீர் வடிகால் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த வந்தார். ஆனால், பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் போலீசார், நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு வாரத்தில் குழாய் உடைப்பினை முற்றிலும் சரி செய்வதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...