கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் இன்று பொறுப்பேற்றார்.
கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பாண்டியராஜன் இன்று பொறுப்பேற்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர்.மூர்த்தி பணியாற்றி வந்த நிலையில், தற்போது அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், காலியான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதவிக்கு பாண்டியராஜன் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, இன்று கோவை வந்த அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்றார்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த இவர், திண்டுக்கல், தேனி, பழனி, ஆண்டிப்பட்டி மற்றும் தென்காசி தென்காசி போன்ற பல்வேறு இடங்களில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் சமளாபுரத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய போது, அங்கு இருந்து பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்து சர்ச்சியில் சிக்கினார்.

இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட அதிவிரைவு படை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "குற்றங்கள் அதிகமாக நடக்கும் இடங்களை கண்காணித்து, அந்த இடங்களில் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவேன். தமிழகத்தில் மாவோயிஸ்டுகள் இல்லை. ஆனால், கேரளாவில் அவர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
ஆகவே, கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு ஏற்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தொடர்ந்து செயல்படுவேன். பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க முக்கியத்துவம் அளிப்பேன்.
பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக செல்லும் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளை தடுக்க அதிக கவனம் செலுத்துவேன்." என்றார்.