லாரிகள் ஸ்டிரைக்கால் உதகையில் கேரட் வரத்து குறைவு : ஒரு கிலோ ரூ. 60 ஆக உயர்வு

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தின் காரணமாக வரத்து குறைவால், உதகையில் ஒரு கிலோ கேரட்டின் விலை 60 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தின் காரணமாக வரத்து குறைவால், உதகையில் ஒரு கிலோ கேரட்டின் விலை 60 ஆக உயர்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் விளையும் கேரட்டுக்கு மேட்டுப்பாளையம், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் மவுசு அதிகம். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும், உதகை மார்க்கெட்டுக்கு 5 டன் அளவுக்கு கேரட் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. 



கடந்த ஒரு வாரமாக தொடரும் லாரிகளின் வேலைநிறுத்தத்தால் தினமும் ஒரு டன் அளவுக்கே கேரட் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த வேலைநிறுத்தம் 8-வது நாளாக நீடிப்பதால், அறுவடைக்கு தயாரான கேரட்டை சந்தைக்கு அனுப்புவதில் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

கடந்த இரண்டு நாட்களாக உதகை மார்க்கெட் காய்கறி ஏலத்தில் ஒரு கிலோ கேரட் ரூ. 30 முதல் ரூ. 35 வரை விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ அதிகபட்சம் ரூ. 60 வரை விற்கப்படுகிறது. உதகை சுற்றுவட்டார பகுதிகளான கேத்தி பாலாடா, எம்.பாலாடா, கோத்தகிரி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் அரசு பேருந்துகளுக்கு, அதற்குண்டான வாடகையை முன்கூட்டியே செலுத்தி மேட்டுப்பாளையம், சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு கேரட் மூட்டைகளை எடுத்து செல்கின்றனர்.



இது குறித்து உதகை நகராட்சி மார்க்கெட் காய்கறி மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில், ''லாரிகள் வேலைநிறுத்தத்தால் உதகை மார்க்கெட்டுக்கு தற்போது, ஒரு டன் அளவுக்கு கேரட் விற்பனைக்கு வருகிறது. 35 கிலோ கேரட் அடங்கிய ஒரு மூட்டை, ரூ. 1,000-க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. லாரி ஸ்டிரைக் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் மலை காய்கறிகளின் விலை சற்றுக் குறையும்,'' என்றார்.



Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...