கோவை: சென்னையில் அமைச்சர் ஜெயகுமார் மற்றும் வீரமணி தலைமையில் நேற்று ஜி.எஸ்.டி தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில், கொடிசியா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது, ஜி.எஸ்.டி வரிகள் மற்றும் வரியை ரிட்டன்ஸ் தொடர்பாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் அமைச்சர்களிடம் குற்றம்சாட்டினர்.

ஜாப் ஆர்டர்கள் மீதான ஜி.எஸ்.டி வரி தற்போது 18 சதவீதமாக இருப்பதை சுட்டிக்காட்டிய கொடிசியா உறுப்பினர்கள் அதனை 5சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும், இணையம் மூலமாக கட்டணம் செலுத்தும் வரம்பை, ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்றும், அட்டோ மொபைல்ஸ் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.