கோவை: தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து வாங்கி வந்து கோவையில் விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சென்று லாட்டரி சீட்டுகளை வாங்கி வரும் இடைத்தரகர்கள், அதை தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டுகளுக்கு அடிமையாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விலைக்கு (கமிஷன்) வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதைத் தடை செய்வதற்காக மாநகர போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளிலும், சோதனைகளிலும் ஈடுபட்டு வந்தாலும் மறைமுகமாக பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.
இந்த நிலையில், புலிகுளத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனையை தொடர்ந்து செய்து வந்த லாட்டரி விற்பனை ஏஜெண்டு மோகன் (62) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
லாட்டரி சீட்டு தடை செய்யப்படுவதற்கு முன் இவர் அந்த வியாபாரம் தான் செய்து வந்துள்ளார். தடைக்கு பிறகும் இவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த காரணத்தால் கடந்த 2010-ம் ஆண்டு போலீசார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனர்.
சிறையில் இருந்து வெளியே வந்து சில நாட்கள் லாட்டரி வியாபாரத்தை நிறுத்திய மோகன், தற்போது மீண்டும் லாட்டரி வியாபாரத்தைத் தொடங்கியதை கண்டறிந்த போலீசார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவரை கைது செய்தனர்.
மேலும், அவரிடமிருந்த 350-க்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட லாட்டரிகளை பறிமுதல் செய்தனர்.