தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதியுற்று வரும் சூழலில், மதுரையில் இருந்து தரை வழிப்பயணமாக மு.க.அழகிரி சென்னை விரைந்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் அவதியுற்று வரும் சூழலில், மதுரையில் இருந்து தரை வழிப்பயணமாக மு.க.அழகிரி சென்னை விரைந்துள்ளார்.
மேலும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

தொடர்ந்து, பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் தி.மு.க. தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
தற்போது, அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.