கோவையில் மன நோயாளியை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த காவலர்

கோவை: கோவையில் முதல்நிலை காவலர் ஒருவர் மன நோயாளியை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

கோவை: கோவையில் முதல்நிலை காவலர் ஒருவர் மன நோயாளியை சுத்தப்படுத்தி புத்தாடை அணிவித்த சம்பவம்

நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

செல்வபுரம் டி-2 காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணிபுரிபவர் பிரதீப். இவர் பேரூர் ரோடு வாய்க்காப்பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியருகே பணியில் இருந்த போது அங்கு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.

அந்த நபரை, சுத்தம் செய்து, முடிதிருத்தி அவரை அன்போடு கவனித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதே காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர் ஒருவர் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக வாகனத்தை தாறுமாறாக ஓட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. 



அதேபோல், காவலர்கள் லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த தொடர் சம்பவங்கள், பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அன்புள்ளம் கொண்ட காவலரின் மேன்மை மிக்க செயல்பாடு செல்வபுரம் பகுதி மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கோவை மக்களையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...