மும்பையில் பிரபலமான 'டப்பாவாலா' குறித்து கோவையில் கருத்தரங்கு

கோவை : மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது.

கோவை:  மும்பையில் பிரபல உணவு முறையான 'டப்பாவாலா' குறித்த கருத்தரங்கு கோவையில் நடைபெற்றது. 

அவினாசி சாலையில் உள்ள ஓட்டல் ரெசிடென்சியில் எப்.ஐ.சி.சி.ஐ., மகளிர் அமைப்பின் சார்பில் 'மும்பை டப்பாவாலா விநியோகச் சங்கிலி மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக சர்வதேச எழுச்சிமிகு பேச்சாளர் பவன் அகர்வால் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், எப்.எல்.ஓ., கோவையின் தலைவர் ஜெயந்தி மனோகர் கலந்து கொண்டு, இந்தக் கருத்தரங்கு பற்றியும், ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின் அடிப்படையில் பவன் அகர்வால் மேற்கொண்டு வரும் மும்பை டப்பாவாலாவின் ஆராய்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். 



இதைத் தொடர்ந்து, பேச்சாளர் பவன் அகர்வால் பேசுகையில்," புறநகர் ரயில்களில் தொலைதூரம் பயணித்து பணிக்கு செல்பவர்களுக்கு, அவர்களது வீடுகளில் நேரமாக எழுந்து உணவு தயார் செய்து கொடுப்பது என்பது முடியாத காரியம். 



எனவே, இது போன்ற பணிகளுக்கு செல்பவர்களுக்கு டப்பாவாலாக்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கின்றனர். 5,000-க்கும் மேற்பட்ட டப்பாவாலாக்கள் நாள்தோறும் 8 முதல் 9 மணிநேரம் தொடர்ந்து பணியாற்றுகின்றனர். குறைந்தபட்சம் 60 முதல் 70 கி.மீ., தொலைவு பயணம் செய்கின்றனர். புறநகர் ரயில்களில் குறைந்தது 2 லட்சம் டிபன் பாக்ஸுகள் புழக்கத்தில் இருக்கும். 8-வது வரை படித்துள்ள டப்பாவாலாவே சராசரியாக மாதம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை சம்பாதிக்கின்றனர்," இவ்வாறு அவர் கூறினார். 

 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...