சூயஸ் நிறுவனம் கோவையை தேர்வு செய்ய அணைகளே முக்கியக் காரணம் : கோவையில் ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு கோவையை சூயஸ் நிறுவனம் தேர்வு செய்ததற்கு அணைகளே முக்கியக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.



மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு கோவையை சூயஸ் நிறுவனம்  தேர்வு செய்ததற்கு அணைகளே முக்கியக் காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபுரத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியார்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மின்சாரம், பெட்ரோல் போல கோவை மாநகராட்சியில் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டுமென்பது ஏற்புடையது அல்ல. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மேலும், சூயஸ் நிறுவனம் கோவையை தேர்ந்தெடுக்கக் கோவை சுற்றுவட்டாரத்தில் 11 அணைகள் இருப்பதே காரணம். 24 மணிநேர குடிநீர் விநியோகம் என்பது மக்களை ஏமாற்றும் செயல். 

சூயஸ் நிறுவனமே குடிநீர் கட்டணத்தை தீர்மானிக்கும் என்பதை மாநகராட்சி மறைக்கிறது. வீட்டின் பரப்பளவிற்கு ஏற்ப குடிநீர் கட்டணம், பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைக்கக் கூடாது என்ற சூயஸ் நிறுவனத்தின் நிபந்தனையைச் செயல்படுத்த முயல்கிறது. குடிநீரை வணிகமாக்குவதை ஏற்க முடியாது. சூயஸ் குடிநீர் திட்டத்தில் எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும் எதிர்த்து முறியடிப்போம். சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசின் கொள்கை, திட்டங்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை கைது செய்வது ஜனநாயக விரோதமானது. 

துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்காதது தவறு. தனியாருக்கு ராணுவ விமானத்தைப் பயன்படுத்த அனுமதித்ததும் தவறு. அரசியல் நோக்கத்திற்காக மத்திய அரசு வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது. சத்துணவு பணியாளர்கள் முதல் துணைவேந்தர் நியமனம் வரை ஊழல் நடைபெறுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...