அரசு பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்களுக்கான ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் படிக்கும் இறுதியாண்டு கட்டாய சுழற்சி முறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவர் அல்லாத முதுநிலை பட்டம் மற்றும் பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- ஊக்கத்தொகையானது, உள்ளிருப்பு பயிற்சி மாணவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயாகவும், முதலாம் ஆண்டு முதுநிலை பட்ட மருத்துவ மாணவர்களுக்கு ரூ. 35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.35,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல, முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் ரூ.35,000 ஆகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.37,500 ஆகவும், முதலாம் ஆண்டு படிக்கும் உயர் மருத்துவ மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும், 3,4,5,6-ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு, ரூ.45 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...