பவானி ஆற்று வெள்ளப்பெருக்கால் மூழ்கடிக்கப்பட்ட உயர்மட்டப் பாலம்: 4 கிராம மக்களின் போக்குவரத்து துண்டிப்பு

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளப் பெருக்கால் உயர் மட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளப் பெருக்கால் உயர் மட்ட பாலம் நீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை நிரம்பியது. இதனையடுத்து, பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பில்லூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் பவானி ஆற்றின் வழியாக பவானி சாகர் அணையை வந்தடைகிறது. இந்த நிலையில், பவானி சாகர் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் 110 அடியை எட்டியுள்ளது.

தொடர்ந்து அதிகரிக்கும் வெள்ளம் காரணமாக பவானி ஆற்றின் கரையோரத்தில் உள்ள சிறுமுகை அருகே உள்ள காந்தையாற்று உயர்மட்ட பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியது. இதனால், நான்கு கிராம மக்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. காந்தவயல், ஆலூர், உளியூர் உள்ளிட்ட கிராமங்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் இரண்டு அரசு ஆரம்பள்ளியும், ஒரு அங்கன்வாடி பள்ளியும் செயல்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதும் கேள்விக்குறியாகி உள்ளது.



சுமார் 20 அடி உயரம் கொண்ட இந்தப் பாலம் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் 105 அடிக்கும் மேல் உயர்ந்ததால் தற்போது நீரில் மூழ்கி உள்ளது. மேலும், இந்தப் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு இருந்த லட்சக்கணக்கான வாழைகளும் நீரில் மூழ்கி உள்ளன.



கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் அவ்வப்போது இதே நிலை தொடர்வதால், இந்தப் பாலத்தை 30 அடிக்கும் மேல் உயர்த்த அரசுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...