முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலிக்குடங்களுடன் முற்றுகை போராட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முறையான குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து பல்லடம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது வலசுப்பாளையம். இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டுகின்றனர்.

அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்றால் கூட 5 கி.மீ தொலைவிற்குச் சென்றுதான் தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளதாகக் கூறினர். முறையான குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் பல்லடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தைக் காலிக்குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் கூடிய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆனால் தங்கள் பகுதிக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்லடம் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...