லாரி ஸ்டிரைக் எதிரொலி: பேருந்துகளின் மூலம் காய்கறிகளை பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் நீலகிரி விவசாயிகள்

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் விளையும் காய்கறிகளை, சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கு, அரசு பேருந்துகளின் மூலம் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.

நீலகிரி: லாரிகளின் தொடர் வேலைநிறுத்தத்தால் நீலகிரியில் விளையும் காய்கறிகளை, சென்னை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பிற மாவட்ட சந்தைகளுக்கு, அரசு பேருந்துகளின் மூலம் விவசாயிகள் விற்பனைக்கு எடுத்துச் சென்று வருகின்றனர்.



சுங்கவரிக் கட்டணம், பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக, விவசாயப் பொருட்களை விற்பனைக்கான வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் விவசாயிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், கோடிக்கணக்கான விளை பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.

லாரிகளின் வேலைநிறுத்தத்தால் 'பிக்-அப்' உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களில் குறைந்தளவு மூட்டைகளை ஏற்றிச் சென்று விற்பனை செய்தாலும், நீலகிரியில் அறுவடை செய்யப்படும் பெரும் அளவிலான காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லாரிகளின் வேலைநிறுத்தம் முடிவுக்கு வரும் வரை, அரசு பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதில், உள்ளூரில் காய்கறிகளை இலவசமாகக் கொண்டு வர அனுமதிக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், சென்னை வரை பேருந்துகளில் காய்கறிகளைக் கொண்டு செல்லக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.



இது குறித்து மாவட்ட இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :- லாரிகள் வேலை நிறுத்தத்தால், விவசாயிகள் விளை பொருட்களை அரசு பேருந்துகளில் சந்தைக்கு எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விபரங்களுக்கு, அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேரிலோ அல்லது, 0423 - 2441260 என்ற எண்ணுக்கோ தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...