நீலகிரியில் பாரம்பரிய நடனத்துடன் அறுவடை திருவிழாவை நடத்திய 33 கிராமங்களின் மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கீழ் அப்புக்கோடு பகுதியில் அறுவடை திருவிழாவை படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோலாகலமாக கொண்டாடினர்.



மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறது. இதனையடுத்து மலை தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.

இந்நிலையில் இன்று படுகர் இன மக்கள் வாழும் மேற்கு நாடு சீமைக்குட்பட்ட, கீழ் அப்புக்கோடு பகுதியில் 33 கிராமங்களைச் சேர்ந்த மக்களின் குல தெய்வ கோவிலில் காய்கறி அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனத்துடன் நடைபெற்ற இந்த திருவிழாவில் 33 கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



கடந்த மார்ச் மாதம் விதை நடவு செய்யும் விழாவாகக் கொண்டாடப்பட்டு, அன்று பயிரிடப்பட்ட பயிர்களை இன்று அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பயிர்களை கடவுளிடம் காணிக்கையாக செலுத்தி இந்தாண்டு பெய்த மழையைப் போல் ஆண்டுதோறும் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, பயிர் செய்த காய்கறிகளை இன்று முதல் விற்பனைக்காக எடுத்துச் செல்லும் விழாவாக இவ்விழா கொண்டாடப்பட்டது.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...