கோவையில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.

கோவை: மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு நடத்தினர்.



உணவுப் பொருட்களில் செய்யப்படும் கலப்படங்களை கண்டறிய கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கவுண்டம்பாளையம், சங்கனூர் சாலை, ஆவாரம்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள் மற்றும் பழச்சாறு கடைகளில் இன்று சோதனை நடைபெற்றது.



உணவு பாதுகாப்பு துறையால் வழங்கப்படும் உரிமம், பாக்கெட் உணவு வகைகளின் காலாவதி தேதி, தின்பண்டங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், டீ தூளின் தரம், உணவு பாதுகாக்கப்படும் முறை, குளிர்பானங்களின் காலாவதி தேதி ஆகியவற்றை அதிகாரிகள் சோதனை செய்தனர்.



சங்கனூர் சாலை அருகே அமைந்துள்ள டீ கடையில், சுத்தமில்லாத தண்ணீர் பயன்படுத்துவது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அங்கு சோதனை நடத்தப்பட்டு, கடை உரிமையாளிரிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.



அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்த சமூக ஆர்வலர் கிருபாகரன் பேசுகையில், "நகரில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்தோர் நடத்தும் பேக்கரிகளில் எந்த சுகாதார விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. தொடர்ந்து இது போன்ற திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்." என்றார்.

சோதனை குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வும், எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நகர் முழுவதும் இதுபோன்று தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கலப்பட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...