டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் ஆதிக்கம் செலுத்தவிருக்கும் கோவை வீரர்கள்

அடுத்த மாதம் தொடங்க இருக்கும் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோவையைச் சேர்ந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர்.


அடுத்த மாதம் தொடங்க இருக்கும் டி.என்.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கோவையைச் சேர்ந்த வீரர்கள் ஆதிக்கம் செலுத்தவுள்ளனர்.  



தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்ற இந்த போட்டி 3-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஜுலை 11-ம் தேதி தொடங்கும் இப்போட்டியில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், சீசெம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. 

3-வது டி.என்.பி.எல். சீசனுக்கான வீரர்களின் ஏலம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. அதில், வீரர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு அணியின் நிர்வாகத்தினரிடையே கடும் போட்டி நிலவியது. ஒவ்வொரு அணியும் தலா 18 முதல் 19 வீரர்கள் எடுக்கலாம். அவர்களில் 2 பேர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களாகவும், மூன்று பேர் 19 வயதுக்குட்பட்ட வீரர்களாகவும் இருக்க வேண்டியது கட்டாயமாகும்.

இந்த நிலையில், இந்த ஏலத்தில் கோவையைச் சேர்ந்த 11 வீரர்களை அணியினர் தேர்வு செய்தனர். பி. சரவணக்குமார் (ரூபி திருச்சி வாரியர்ஸ்), ஆர். மிதுன், ஜே. சுரேஷ்குமார் (லைகா கோவை கிங்ஸ்), எஸ். சுபேம் மேக்தா (டூட்டி பேட்ரியாட்ஸ்) ஆகிய இளம் வீரர்கள் இந்த சீசனில் அறிமுக வீரர்களாக களம் காணுகின்றனர். 



ஜே. கவுசிக் சீசெம் மதுரை பேந்தர்சுக்கும், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஜெகதீசன், சி. ஹரி நிஷாந்த், எம். அபினவ் ஆகியோர் திண்டுக்கல் டிராகன்சுக்கும், அவுசிக் ஸ்ரீனிவாஸ் காஞ்சி வீரன் அணிக்காகவும் விளையாடவுள்ளனர். இதேபோல, கோவையில் இருந்து யு19 இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட எஸ். ராதாகிருஷ்ணனை ஐடிரீம் காரைக்குடி காளை அணி எடுத்துள்ளது. இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களான எஸ். மோகன் பிரசாத் மற்றும் எம். ஷாஜகான் ஆகியோரை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது. 

"கடந்த சில நாட்களில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரை நடத்தினோம். இதில், 20-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதைத் தொடர்ந்து, இளம் வீரர்களுக்கான 5-வது டிவிசன் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். இது போன்ற போட்டிகள் கோவையில் இருக்கும் இளம்வீரர்களுக்கு நல்ல அடித்தளமாகவும், அவர்களது திறமைகளை வெளிக்கொணர ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்," என்றார் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் சுரேஷ்குமார்.



3-வது டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் குறித்து நடப்புச் சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸின் துணை பயிற்சியாளர் அவினாஷ் கந்தேவால் கூறுகையில், "தற்போது கோவையில் மாவட்டம் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஆதரவு சரியான பாதையில் செல்கிறது. கடந்த சில நாட்களாக நமது கோவையில் இருந்து சிறந்த வீரர்களின் பங்களிப்பு அதிகளவில் உள்ளது. கடந்த 2 சீசன்களில் கோவை வீரர்களை டி.என்.பி.எல்., அணிகள் எடுத்துள்ளன. குறிப்பிட்ட சில வீரர்கள் பெரிய அளவிலான லீக் ஆட்டங்களில் விளையாடி வருகின்றனர். ரஞ்சி டிராபி, யு16, யு19 அல்லது தமிழக யு23 அணிகளில் கோவையைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடி வருகின்றனர்," என்றார். 

அறிமுக வீரர்களின் விபரம் :



பி. சரவண குமார் (ரூபி திருச்சி வாரியர்ஸ்) : சென்னையில் 3-வது டிவிசன் போட்டிகளில் விளையாடி வரும் சரவணன், நடுத்தர பேட்ஸ்மேன். அவர், தற்போதைய சீசனில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்தவர்களில் அவரது நண்பர் பாலு மற்றும் அன்னூரைச் சேர்ந்த பயிற்சியாளர் பிரபுகுமார் மற்றும் கோவை நைட்ஸின் பயிற்சியாளர் சந்திரமவுலி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். விவசாயியின் மகனான சரவணன், பொறியியல் பட்டதாரி ஆவார். கிரிக்கெட் விளையாட்டை அவரது பேஷனாக வைத்துள்ளார். 



ஆர். மிதுன் (லைக்கா கோவை கிங்ஸ்) : 13 வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடி வரும் இவர் வலது கை பேட்ஸ்மேன் மற்றும் ஆப் ஸ்பின்னராவார். "அங்கன்வாடி ஆசிரியையின் மகனான மிதுன், தனது தாயை முன்மாதிரியாகக் கொண்டுள்ளேன். தந்தை இறந்துவிட்டதால், தாயின் கடின உழைப்பால்தான், இந்த நிலைக்கு வந்துள்ளேன். யு16 அணியில் சிறப்பாக செயல்பட்டதற்கு பயிற்சியாளர் குருசாமிதான் காரணம்," என இளம்வீரர் மிதுன் கூறினார். அவர் சென்னை லீக் போட்டியில் 44 பந்துகளுக்கு 78 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய, லைக்கா கோவை கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். 

ஜே. சுரேஷ்குமார் (லைக்கா கோவை கிங்ஸ்) : விக்கெட் கீப்பரும், டாப் ஆர்டர் பேட்ஸமேனாக அவர் செயல்பட்டு வருகிறார். கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ., முடித்த இவர், சென்னை 2-வது டிவிசனில்  ரயில்வே மற்றும் ஸ்பிக் அணிக்கு எதிராக இரு சதங்களை விளாசியுள்ளார். ஒரு பொறியியல் பட்டதாரி கிரிக்கெட் வீரராக அவதாரம் எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. "முதல்முறையாக நான் கல்லூரி நாட்களிலே கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன்," என்கிறார் சுரேஷ்குமார்.

சுபம் மேக்தா (டூட்டி பேட்ரிட்ஸ்) : 21 வயதான இவர் பட்டப்படிப்பை பி.எஸ்.ஜி., கல்லூரியில் படித்து முடித்தார். வலது கை பேட்ஸ்மேனும், வேகப்பந்து வீச்சாளரான சுபம் 2003-ம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். "தற்போதைய நிலைக்கு எஸ்.என்.ஆரின் பயிற்சியாளர் அவினாஷ்தான் முக்கியக் காரணம்," என அவர் கூறினார். சுபம் மேக்தா, டூட்டி பேட்ரிட்ஸ் அணிக்காக அறிமுக வீரராக களமிறங்குவது குறிப்பிடத்தக்கது. 

மாநில மற்றும் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். எனவே, தற்போது நடைபெற உள்ள டி.என்.பி.எல்., கிரிக்கெட் தொடர், கோவையில் நடைபெற வேண்டும் என மாவட்ட அளவில் தேர்வாகியுள்ள கிரிக்கெட் வீரர்கள், அவர்களது பயிற்சியாளர்கள் மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...