சுற்று சூழல் தினம் : கோவை அரசு பள்ளிகளில் 10,000 மரக் கன்றுகள் நடவு

கோவை: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, சுற்று சூழல் மன்றம் மற்றும் லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 297 பள்ளிகளில் 10,000 மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை: உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, சுற்று சூழல் மன்றம் மற்றும் லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் 297 பள்ளிகளில் 10,000 மரக் கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தேவாங்கா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன், லெட்ஸ் தேங்க் ஃபவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பிரதீப் மற்றும் சுற்று சூழல் ஆர்வலர்கள் 14 மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.



தொடர்ந்து, லெட்ஸ் தேங்க் அமைப்பினர் பேசுகையில், "மாணவர்கள் மத்தியில் மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக, மரக் கன்றுகள் நடப்பட்டு மாணவர் பொறுப்பில் ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு மரக் கன்றையும் பராமரிக்கும் மாணவரின் பெயர், அருகில் பொருத்தப்பட்டுள்ள பெயர் பலகையில் எழுதப்படும். 



இது மரத்தின் மீதான நெருக்கத்தை மாணவர் மத்தியில் அதிகரிக்கும். மேலும், உலக சுற்றுச் சூழல் தினமான இன்று சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்புபற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் 297 பள்ளிகளில் நடைபெறுகிறது. காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை இப்பள்ளிகளில் 10,000 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டுவைக்கின்றனர். 



இதற்காக கடந்த இரண்டு மாதங்களாக லெட்ஸ் தேங்க அமைப்பைச் சேர்ந்த 38 தன்னார்வலர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்நிகழ்வை ஒருங்கிணைத்துள்ளனர்." என்றார்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...