அதிக மாணவர்களை ஏற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும்: போக்குவரத்து ஆணையரகம் எச்சரிக்கை

சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.


சென்னை: பள்ளி வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த அளவுக்கு மேல் மாணவர்களை ஏற்றி பயணிக்கும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக 30,500-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதை தவிர, மாணவர்களை பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பெரும்பாலும் தனியார் வேன்கள் மற்றும் ஆட்டோக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.



அவ்வாறு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு 16 விதிமுறைகள் உள்ளன. இந்த 16 விதிமுறைகளும் பின்பற்றப்படுகிறதா? என ஆண்டுதோறும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் விதிமுறை மீறல் இருந்தால் வாகனங்களுக்கான பர்மிட்டை ரத்து செய்து போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் ஆம்னி வேன்களில் அதிக மாணவர்களை ஏற்றிச் செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆட்டோக்களில் பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது. இதேபோல், பெரிய வேன் வகைகளில் 17 பள்ளி சிறுவர்களுக்கு மேல் ஏற்றிச் செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பர்மிட் சஸ்பெண்ட் செய்து, வாகனங்களையும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...