திருப்பூரில் குவியும் குப்பைகள் : சேகரிக்க இடமின்றி திணறும் மாநகராட்சி நிர்வாகம்

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொட்ட இடமில்லாத காரணத்தால் மாநகராட்சி அதிகாரிகள் திணறி வருகின்றனர். 

மாநகருக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் குப்பைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இப்படி குவியும் குப்பைகள் நல்லூர் அருகே உள்ள பாறைக்குழிக்குள் கொட்டப்பட்டு வந்தது. இந்த பாறைக்குழி கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு நிரம்பியது. 

இதனையடுத்து கஞ்சம்பாளையம், வெள்ளியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளைக் கொட்ட இடம் தேர்வு செய்தனர். ஆனால், அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை எங்கு கொட்டுவது? என்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குப்பைகளைக் கொட்ட போதிய இடம் கிடைக்காததால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பைகள் அள்ளப்படாமலே இருந்து வருகிறது. சாலையோரங்களில் குப்பைகள் தேங்கிய நிலையிலேயே கிடக்கிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனை செய்து குப்பை கொட்டுவதற்கான மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...