லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு... கருணாசை கலாய்த்த பத்திரிகை

சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து 'நமது அம்மா' பத்திரிகையில் அவர்களை 'கிண்டல் செய்யும் விதமாக செய்தி வெளியாகியுள்ளது.


சென்னை: மு.க.ஸ்டாலின் நடத்திய போட்டி சட்டசபையில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவர் கலந்து கொண்டதை கண்டித்து 'நமது அம்மா' பத்திரிகையில் அவர்களை 'கிண்டல் செய்யும் விதமாக செய்தி வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகும் வரை சட்டசபை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள மாட்டேன் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். இதையடுத்து அவர் அண்ணா அறிவாலயத்தில் போட்டி சட்டசபையைக் கூட்டினார். இதில் அ.தி.மு.க.,வுக்கு எதிராக கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரியும் அடக்கம்.



இவர்கள் மூவரையும் விமர்சனம் செய்து நமது அம்மாவில் தலையங்கம் வெளியாகியுள்ளது. அதில், இரட்டை இலை சின்னத்தாலும் ஈகைக்கும், வாகைக்கும் இலக்கணம் வகுத்த அ.தி.மு.க., தொண்டர்களின் இமைதுஞ்சா உழைப்பாலும் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினரான மாற்றுக் கட்சியை சேர்ந்த நன்றிகெட்ட பேர்வழிகள் சிலர் தி.மு.க., நடத்திய கோமாளி மாதிரி சட்டமன்றத்துக்கு சென்று பஃபூன் வேஷம் கட்டியிருக்கிறார்கள். என்றும், லொடுக்கு பாண்டிகளுக்கு சுளுக்கு காத்திருக்கு.. என்றும் கடுமையாக தாக்கி எழுதப்பட்டுள்ளது.

இந்த கட்டுரை கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரது ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...