ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ஆனைகட்டியில் போடப்படும் தரமற்ற தார்சாலைகள்

கோவை: தமிழக எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைகிராமத்தை இணைக்கும் சாலைகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் தரமற்றுப் போடப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


கோவை: தமிழக எல்லைப் பகுதியான ஆனைகட்டி மலைகிராமத்தை இணைக்கும் சாலைகள், ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் தரமற்றுப் போடப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

மேற்குமலைத்தொடர்ச்சியில் இருக்கும் ஆனைகட்டி மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். இங்கு, அடிக்கடி மழை பெய்வதால், அரசால் போடப்படும் தார் சாலைகள் சீக்கிரம் பெயர்ந்து குண்டும், குழியுமாகி மாறி விடுகிறது. இந்நிலையில், ஆனைகட்டி ஆலமரமேடு பகுதியில் உள்ள கொண்டனூர், கொண்டனூர் புதூர், பணப்பள்ளி ஆகிய கிராமங்களில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இதனிடையே, இந்த நான்கு மலைவாழ் கிராமங்களையும் வகையில் சுமார் 5 கி.மீ. தொலைவிற்கு தார் சாலைகள் போட ரூ. 60 லட்சம் மதிப்பில் ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றது. ஒப்பந்தம் எடுத்தவர் சாலை அமைக்க முதலில் செம்மண், கருங்கல் பரப்பி, மீண்டும் செம்மண் போட்டு பின்பு ஜல்லி கற்களை பரப்பி அதன் மீது தார் ஊற்றி குவாரி மண் போடுவது வழக்கம். 

இதனைவிடுத்து, சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றவர்களோ, நேரடியாக ஜல்லி கற்களை போட்டு தார் ஊற்றுவதால், சில மாதங்கள் கூட சாலை இருக்காத சூழல் ஏற்படும். மேலும், இப்பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளதால், தரமற்று போடப்படும் தார் சாலைகள் சீக்கிரம் பெயர்ந்து விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



எனவே, வட்டார வளர்ச்சி அதிகாரிகளும், அத்தொகுதி எம்.எல்.ஏ.வும் உடனடியாக நடவடிக்கை எடுக்க நான்கு கிராம மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இப்பகுதியில், இலவச கழிப்பிடம் கட்டித்தராமல் ஏமாற்றியதாக ஒப்பந்ததாரர் மீது புகார் எழுந்ததையடுத்து கட்டிக்கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல, தரமற்ற சாலைகள் அமைக்கும்போதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



Video: M.Balaji

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...