75-வது பிறந்த நாளை கொண்டாடும் இசைஞானி: குடியரசு தலைவர் உள்பட பலர் வாழ்த்து

இன்று 75-வது பிறந்த நாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவிற்கு, குடியரசு தலைவர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இன்று 75-வது பிறந்த நாளை கொண்டாடும் இசைஞானி இளையராஜாவிற்கு, குடியரசு தலைவர் உள்பட பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த ராமசாமி, சின்னத்தாயம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர் இளையராஜா. இவரது இயற்பெயர் ராசய்யா. இவரது மனைவியின் பெயர் ஜீவா. இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி ஆகிய 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்ற அவர், 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். 



அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ்.ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன. அதுமட்டுமில்லாமல், கர்நாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, கண்ணன் ஒரு கைக்குழந்தை, சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன.



முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். தமிழ் திரைப்படக் கலைஞர்களால் இளையராஜா "மேஸ்ட்ரோ" என்றோ அழைக்கப்படுகின்றார். இதுவரை அவர் 1000-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்மபூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாட்டின் 2-வது உயரிய விருதான பத்ம விபூஷண் விருதையும் உச்சிமுகர்ந்தார். 

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவராக திகழ்ந்து வருகிறார். இப்படி, இசை என்றால் இளையராஜா, இளையராஜா என்றால் இசை என்ற அளவுக்கு லிஜென்ட்டாக விளங்கும் அவர் இன்று தனது 75-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே, இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை ஒட்டி, “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்” என அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் விடுத்துள்ள பதிவில், “இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும், ஒப்பற்ற கலைஞர், இசை மாமேதை, தன்னேரில்லா இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

இவ்வாண்டுத் தொடக்கத்தில், அன்னாருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியதை யான் பெற்ற பெரும்பேறாகக் கருதுகிறேன் - குடியரசு தலைவர் கோவிந்த்.” என அவர் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழியிலும் பதிவிட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இளையராஜாவுக்கு தான் வழங்கிய பத்ம விபூஷண் விருது கொடுக்கப்பட்ட புகைப்படத்தையும் குடியரசுத் தலைவர் இணைத்து பதிவிட்டுள்ளார்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...