ஊட்டி - கேட்டி இடையே நாளை முதல் வார இறுதிச் சுற்றுலா ரயில் இயக்கம்

நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.


நீலகிரி: ஊட்டி - கேட்டி இடையே இயக்கப்படும் வார இறுதி வட்டச் சுற்றுலா மலை ரயில் நாளை முதல் இயக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் உதகைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் உ. சுப்பாராவ் அறிவித்தபடி, வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நீலகிரி மலை ரயில், ஊட்டி மற்றும் கேட்டி இடையே இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, நாளை (ஜுன் 02) முதல் வார இறுதி வட்டச் சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலில் ஒரு முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு இணைந்த ரயில்பெட்டியும் (16 முதல்வகுப்பு + 36 இரண்டாம் வகுப்பு, மொத்தம் 52 இருக்கைகள்), ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் (30 இருக்கைகள்) மொத்தம் 82 இருக்கைகள் இருக்கும்.

உதகையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, கேட்டிக்கு 3.00 மணிக்கும், கேட்டியில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.00 மணிக்கு உதகைக்கும் வந்தடையும்.

இந்த ரயிலின் கட்டணங்கள் முதல் வகுப்பு ரூ. 400. இரண்டாம் வகுப்பு ரூ. 200. இக்கட்டணத்தில் ஒரு சமோசா, ஒரு கப் வெஜிடபிள் சூப், ரயில்வே சின்னம் பொறித்த ஒரு தொப்பி, நீலகிரி மலைரயில் பற்றிய ஒரு சிறு கையேடு மற்றும் ஒரு பேப்பர் பை ஆகியவை வழங்கப்படும். சுற்றுலாப் பயணிகள் இந்த வட்டச் சுற்றுலா ரயில் பயணத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனிடையே, கோவை - பெங்களூரூ இடையே இரண்டு அடுக்கு உதய் எக்ஸ்பிரஸ் ரயில்சேவை வரும் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதையொட்டி, ரயில்வே பிராந்திய ரயில்வே மேலாளர் சுப்பாராவ் கோவை ரயில்நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.



Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...