காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால், தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதால், தமிழக விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், தமிழகத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 

இதனை அடுத்து, மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும், பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.



எனினும், காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. இந்நிலையில், இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடரலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இன்று மாலை அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் இதனை உறுதிபடுத்தினார்.

அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார். ஆணையத்தின் தற்காலிக தலைவராக நீர்வளத் துறை செயலாளர் யூ.பி.சிங் செயல்படுவார். ஆணையத்திற்கு நிரந்தர தலைவர் நியமனம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...