கோவை விளாங்குறிச்சியில் ரூ.100 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம்

கோவை: கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கோவை: கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண். 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாசித்த அறிவிப்பில் :- அளப்பரிய வளர்ச்சியினை அடைந்து இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசு, அதனை முன்னெடுத்து செல்ல பல நடவடிக்கைகளை முனைப்புடன் எடுத்து வருகிறது.

அந்த வகையில், நடப்பாண்டில் பின்வரும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிக்கின்றேன். தொழில் முனைவோர்களுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தை தொடங்க ஏதுவாக, கோவை மாவட்டம் விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ. 100 கோடி மதிப்பீட்டிலும், திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ. 40 கோடி மதிப்பீட்டிலும் இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டடங்கள் கட்டப்படும்.

தமிழ்நாடு அரசின் தகவல் தொழில் நுட்பவியல் உட்கட்டமைப்புகளான டி.என்.எஸ்.டபுள்யூ.ஏ.என்., டி.என்.எஸ்.டி.சி., மற்றும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் மின் ஆளுமை சேவைகளை இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளிலிருந்து கண்காணித்து, தடங்கலற்ற மற்றும் பாதுகாப்பான இணைய சேவையினை வழங்கும் பொருட்டு “தமிழ்நாட்டிற்கான இணையப் பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம்” 21 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் எல்காட் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும். இதன்மூலம், தடையற்ற இணையவழி சேவைகள் மற்றும் அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதன் சந்தாதாரர்களுக்கு தற்போது தரமான வரையறையில் டிஜிட்டல் கேபிள் டிவி சேவை வழங்கி வருகிறது. அதனை மேம்படுத்தும் விதமாக, உயர் வரையறை தரத்தில் மிக துல்லியமான சேவையை “HD செட்டாப் பாக்ஸ்” வாயிலாக வழங்கப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...