பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவு பெற்றது உதகை கோடை விழா

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருமாத காலமாக நடைபெற்று வந்த கோடை விழா, பாரம்பரிய கலை, நிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவடைந்தது. 



நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு கோடை விழாவானது, கடந்த மே 5-ம் தேதி காய்கறி கண்காட்சியுடன் இனிதே தொடங்கியது. இதையடுத்து, உலகப்புகழ் பெற்ற ரோஜா கண்காட்சி, வாசனை திரவியக் கண்காட்சி என மாவட்டமே சுற்றுலாப் பயணிகளின் வரத்தால் விழாக் கோலம் பூண்டிருந்தது. கோடை விழாவின் மணி மகுடமாய் கடந்த 18-ம் தேதி உதகை தாவரவியல் பூங்காவில் 122-வது மலர் கண்காட்சி நடைபெற்றது. 5 நாட்கள் நடைபெற்ற இந்த மலர் கணக்காட்சியை உலகம் முழுவதும் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இதனைத்தொடர்ந்து, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 60-வது பழக்கண்காட்சி நடைபெற்றது.

இந்நிலையில், இந்த ஆண்டு கோடை விழாவின் நிறைவு விழா உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, கோடை விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் தனியார் அமைப்பினருக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நினைவு பரிசுகளை வழங்கினார். இந்த நிறைவு விழாவில் நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். அர்ஜுனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இதில், நீலகிரியின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...