கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு : உற்சாகத்துடன் வகுப்பறைக்குச் சென்ற மாணவர்கள்

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. 



தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்து வரையிலான வகுப்புகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை விடப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைப் போன்றே ஏப்ரல் மூன்றாவது வாரம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. உற்சாகமாக புது வகுப்பிற்கு செல்லும் மாணவர்களை, ஆசிரியர்கள் புன்னகையுடன் வரவேற்றனர். 

கோடை விடுமுறை காலத்தைப் பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து, சரியாகப் பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. 

பள்ளி திறந்த முதல்நாளான இன்றே பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்படவுள்ளன. இந்த ஆண்டு முதல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சீருடைகளின் நிறம் மாற்றப்பட்டுள்ளது. பள்ளி திறக்கும் நாளிலேயே பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளும், தேர்வு முடிவு வெளியாகும் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...