ஜுன் 3-ம் தேதி முதல் கோவை - சென்னை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - சென்னை சென்ட்ரல் இடையே ஜுன் 3-ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் :- ரயில் எண் 06040 : கோவை - சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஜுன் 3-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. கோவை ரயில் நிலையத்தில் இருந்து நண்பகல் 12.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அதே நாளில் இரவு 08.45 மணியளவில் சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டியும், ஸ்லீப்பர் வசதியுடன் 6 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 9 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் என மொத்தம் 18 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறப்பு ரயிலானது, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய இடங்களில் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜுன் 1) காலை 08 மணி முதல் தொடங்குகிறது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...