சமயபுரம் கோவில் யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்

திருச்சி: திருச்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் யானை தாக்கியதில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி: திருச்சியில் உள்ள மாரியம்மன் திருக்கோவிலின் யானை தாக்கியதில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் :- திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் மசினி என்ற யானை தாக்கியதில், மாகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த பாகன் கஜேந்திரன் என்பவர் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். திருக்கோவில் யானை தாக்கியதில் உயிரிழந்த யானைப்பாகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த கஜேந்திரனின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் திருக்கோயில் நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன், இவ்வாறு அதில், தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...