வால்பாறையில் கோடைவிழா நடக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடைபெறாததால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர். 

7-வது சொர்க்கம் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தேயிலை, காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான தொழிலாளர்கள் தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியோடு, பசுமையாகவும் வெள்ளிக்கொடி போல் கண்களுக்கு விருந்தளிக்கும் பல அருவிகளின் ரம்மியான காட்சியும் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமைந்துள்ளது. 



குறிப்பாக, சோலையார் அணை, நீரார் அணை, சின்னக்கல்லார் அணை, கூழாங்கல் ஆறு, நலமுடி காட்சி முனை, சக்தி தலநார் காட்சிமுனை, பிர்லா பால்ஸ், பாலாஜி கோவில், அக்காமலை புல்மேடு என இன்னும் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் வால்பாறையில் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் வால்பாறைக்கு பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். 

இந்நிலையில், இங்கு ஆண்டுதோறும் கோடைகால விடுமுறையான மே மாதத்தில் கடைசி வாரம் கோடைவிழா நடத்துவது வழக்கமாகும். ஆனால், இந்த வருடம் மே மாதம் இறுதி வாரம் ஆகியும், இதுவரையிலும் கோடை விழா நடத்துவது பற்றி அரசு சார்பில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். 

வால்பாறை பகுதியில் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத நிலையில், வருடந்தோறும் நடைபெறும் கோடை விழாவில் நடத்தப்படும், கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு துறைகளால் நடத்தப்படும் கண்காட்சி போன்றவற்றை கண்டு மகிழ்ச்சிடைந்து வந்தனர். இந்நிலையில், இந்த வருடம் கோடைவிழா நடத்தப்படாதது தங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அடுத்த ஆண்டு மே மாதம் முதல் வாரத்திலேயே கோடை விழா நடத்த வேண்டும் என்று பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...