'ஏய் ஏய் வேற ஏதாவது கேள்வி இருக்கா..?' : ரஜினிக்கு பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டனம்

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னையில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது.


சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்துவிட்டு, சென்னையில் செய்தியாளர்களிடம் ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆறுதல் தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்து, போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், கலவரம் நிகழ்ந்ததாக அவர் கூறினார். மேலும், செய்தியாளர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பியதால், நிதானத்தை இழந்த ரஜினி, "ஏய் ஏய் வேற ஏதாவது கேள்வி இருக்கா..?" என ஆவேசமாக கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதாக ரஜினி கூறிய கருத்திற்கு பல்வேறு தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களை ஒருமையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்திற்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கடும் கண்டம் தெரிவித்துள்ளது. 



இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொது வாழ்க்கைக்கு வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை குணங்களை நடிகர் ரஜினிகாந்த் வளர்த்துக் கொள்ள வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை அவருக்கு இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். பத்திரிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ரஜினிகாந்தின் செயலை சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது. 

உடனடியாக, நடிகர் ரஜினிகாந்த் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் அவரை வலியுறுத்துகிறது, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...