போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் : மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

கோவை: அரசு போட்டித் தேர்வுகளுக்கான (தொகுதி - II) பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தொகுதி II -ல் அடங்கிய பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியின் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயிற்சியளிக்க உள்ளது. 

வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி அன்று இலவச பயிற்சி பெற விரும்பும் மனுதாரர்கள் சுயவிவரக் குறிப்புடன் கடவுச் சீட்டு அளவு (பாஸ் போர்ட் சைஸ்) புகைப்படம் ஒன்றுடன் ஜூன் 12-க்குள் துடியலரில் உள்ள கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு எழுத்து மூலமாக நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளித்து பயிற்சிக்கு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். 

மேலும், பயிற்சி வகுப்புகள் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் சனி மற்றும் ஞாயிறு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் தேர்ச்சி அடைந்து அரசு வேலைவாய்ப்பு பெற்று பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...