'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் சாதாரண குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து தீர்வு வழங்கப்படும். இவ்வாறு நிகழ்ச்சி நடைபெறும் போது அவ்வப்போது இருதரப்பினருக்கிடையே சண்டை வருவதும் வழக்கம். இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு இருப்பது போல் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பும் இருந்து வந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் ஆதரவைப் போலவே, எதிர்ப்பும் இருந்து வருகிறது. மேலும், நெட்டின்சன்கள் மீம்ஸ் போடுவது, திரைப்படங்களில் இந்த நிகழ்ச்சியைக் கிண்டல் செய்வதும் ஒருபுறம் நடந்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். அதில், இந்நிகழ்ச்சி ஏழை மக்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளைப் பாதிக்கிறது. அந்தரங்க விஷயங்களை பொது வெளியில் விவாதிக்கும்போது மற்றொரு தரப்பினரின் உரிமை பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த முரளிதரன், கிருஷ்ணசாமி ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிக்கு ஜூன் 18-ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இது குறித்து மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை மற்றும் தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். வழக்கு ஜூன் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...