சர்வதேச தரத்திலான டென்னிஸ் வீரர்களை உருவாக்க முடியும்: டென்னிஸ் வீரர் ஸ்ரீராம் பாலாஜி பேட்டி

கோவை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தால் சர்வதேச தரத்திலான டென்னிஸ் வீரர்களை உருவாக்க முடியும் என்று பிரபல டென்னிஸ் வீரர் ஸ்ரீராம் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு ஆட்ட நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தால் சர்வதேச தரத்திலான டென்னிஸ் வீரர்களை உருவாக்க முடியும் என்று பிரபல டென்னிஸ் வீரர் ஸ்ரீராம் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் 'டாப் ஸ்பின்' டென்னிஸ் பயிற்சி மையத்தில் கடந்த 21-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை 10 நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 குழந்தைகளுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வரும் பிரபல டென்னிஸ் வீரர் ஸ்ரீராம் பாலாஜி, நவநீத கண்ணன், விக்னேஷ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியின் நிறைவு நாளான இன்று பயிற்சி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இது குறித்து பேசிய கோவை மாவட்ட டென்னிஸ் சங்கத்தின் தலைவர் ஜெயச்சந்திரன், "இந்த முகாம் சிறந்த வீரர்களை உருவாக்க முதற்படியாக அமைந்துள்ளது." என்றார்.

பின்னர் பேசிய ஸ்ரீராம் பாலாஜி, "இந்தியாவில் ஐரோப்பிய தரத்திலான டென்னிஸ் அரங்கங்கள் இல்லாதது வருத்தம் அளித்தாலும் குழந்தைகளை சிறு வயதிலிருந்தே ஆட்ட நுணுக்கங்ளை கற்றுப் பழகினால் சர்வதேச தரத்திலான வீரர்களை உருவாக்க முடியும்." என்றார்.

மற்றொரு டென்னிஸ் வீரர் நவநீத கண்ணன் பேசுகையில், "சென்னை ஓப்பன் போட்டிகளில் சர்வதேச வீரர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்து வந்தது. தற்போது புனேவுக்கு இப்போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது. ரசிகனாக வருத்தம் அளித்தாலும் வீரர்களுக்கு மிகுந்த பயனளிக்கும். இதனால் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் டென்னிஸின் தரம் உயரும்." என்றார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...