நிபா காய்ச்சலுக்கு பொள்ளாச்சி மருத்துவமனையில் தனி வார்டு

கோவை: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: நிபா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி பகுதியில் இருந்து கேரள மாநிலமான பாலக்காடு செல்ல சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரத்தியேக வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டில் பத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர் முருகேசன் கூறுகையில், "நிபா காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க இங்கு தனி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தனி வார்டில் நிபா காய்ச்சல் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



பொள்ளாச்சி கேரளத்தின் அருகே உள்ளதால் அங்கு சென்று வருபவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது தனி கவனம் செலுத்தி பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் இருந்து காய்ச்சலோடு வந்த நபருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் நி்பா தாக்குதலா? என்ற முறையில் பரிசோதனைகள் செய்தோம். ஆனால், அவருக்கு சாதாரண காய்ச்சலே இருந்ததால் அதற்கான சிகிச்சை அளித்தோம்." என்றார். 


Video Credit: Laxman

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...