அன்னூர் புறவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்: எவ்வித முன்னறிவிப்புமின்றி அன்னூர் புறவழிச்சாலை சாலை திட்டத்திற்காக விளை நிலங்கள் கையகப்படுத்த முயற்சிகள் நடப்பதாக புகார் தெரிவித்து அன்னூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை - சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கரியாம்பாளையம் பிரிவு முதல் அன்னூர் மேட்டுப்பாளையம் வரை சுமார் ஒன்பது கிலோ மீட்டர் தொலைவிற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கியுள்ளது.

இத்திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்களில் அளவு கற்களை நடும் பணி நடைபெற்றுள்ளது. இதில் பெரும்பாலான நிலங்கள் விவசாய பூமிகளாகும். தங்களது நிலங்களை சாலைப்பணிக்காக எடுத்துக் கொள்வது குறித்து தங்களிடம் கருத்து கேட்பு கூட்டமோ அல்லது எவ்வித முன்னறிப்பு நோட்டீசோ கூட இதுவரை வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் எந்த காரணத்தை முன்னிட்டும் எங்களது விவசாய நிலங்களை விட்டுத்தர இயலாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அன்னூர் பகுதி விவசாயத்தைக் காக்கும் வகையில் புறவழிச்சாலை திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், புறவழிச்சாலை திட்டத்திற்கு பதிலாக மேம்பாலங்கள் கட்டுவதன் சாலை இணைப்பு பணியை தொடர வேண்டும் என கோரிக்கை விடுத்து முழக்கமிட்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...