வால்பாறையில் முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் சந்திப்பு

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் அரசின் உதவி பெறும் பள்ளியின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வால்பாறை தாய்முடி எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் தங்களின் பழைய நினைவுகளைப் போற்றி ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்ளும் அரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், முன்னாள் பள்ளி ஆசிரியர்கள் சரோஜினி, பார்வதி, சத்தியசெல்வம், தங்கராஜ் மற்றும் தற்போதைய ஆசிரியர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சரோஜினி பேசியதாவது :- அன்று என்னிடம் பயின்ற மாணவ, மாணவிகள் மருத்துவர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், போலீஸ் மற்றும் மத்திய, மாநில பணிகளில் இருப்பது எனக்கு பெருமையளிக்கிறது. தற்போது, பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவடைந்து வருவது கவலை அளிக்கிறது. இதனை சரி செய்ய அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன்வர வேண்டும், என்றார்.

இதைத் தொடர்ந்து, பள்ளிக்கு நினைவுப் பரிசாக கேடயத்தை முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...